1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (16:29 IST)

சென்னை அண்ணா மேம்பாலத்தில் ஆறாக ஓடிய பாமாயில்: பரபரப்பு தகவல்

சென்னை அண்ணா மேம்பாலத்தில் பாமாயில் ஏற்றி சென்றூ கொண்டிருந்த லாரி ஒன்று திடீரென்று கவிழ்ந்ததால், அதிலிருந்த 2000 லிட்டர் பாமாயில் சாலையில் ஆறாக ஓடியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னையில் உள்ள தனியார் ஆயில் நிறுவனம் ஒன்றுக்கு சென்னை மணலியில் இருந்து பாமாயில் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி மடிப்பாகத்தை நோக்கி கிளம்பியது. இந்த லாரியை சென்னை அண்ணா அண்ணா மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது மேம்பாலம் முடியும் இடத்தில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது 
 
இதனால் நடுவிலுள்ள டிவைடரில் மோதி விபத்துக்குள்ளான லாரி தலைகுப்புற கவிழ்ந்தது இதனை அடுத்து அதில் இருந்த 2000 லிட்டர் பாமாயில் சிதறி சாலை முழுவதும் ஓடியதால் அங்கு ஓர் ஆயில் ஆறு ஓடியது போல் காணப்பட்டது
 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் மற்றும் தேனாம்பேட்டை காவல்துறையினர் விரைந்து வந்து கவிழ்ந்த லாரி தீப்பிடிக்காமல் இருக்க உடனடியாக தண்ணீர் ஊற்றினார்கள். அதன் பின்னர் அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர் இடம் விசாரித்தபோது லாரி தன்னுடைய கட்டுப்பாட்டை மீறியதால் விபத்து நேர்ந்ததாக தெரிவித்தார். அதிர்ஷ்டவசமாக டிரைவருக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். சென்னையின் முக்கிய பகுதியில் 2000 லிட்டர் பாமாயில் சாலையில் ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது