1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (11:41 IST)

அக்டோபர் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

அக்டோபர் 25ஆம் தேதி மாமன்னர் ராஜ ராஜ சோழனின் 1038 சதய விழாவை அடுத்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

உலகமே போற்றும் தஞ்சை பெரிய கோவிலை கட்டி தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர் மாமன்னன் ராஜராஜ சோழன். ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்தநாளை சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் இரண்டு நாட்கள் தஞ்சை பகுதி மக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அக்டோபர் 24ஆம் தேதி 1038வது சதய விழா கொண்டாட இருக்கும் நிலையில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் அரசு விழாவாக ராஜ சோழனின் பிறந்த நாள் கொண்டாடப்பட இருப்பதை அடுத்து தஞ்சை மாவட்டத்திற்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும்  அன்றைய நாளில் கவியரங்கம், கருத்தரங்கம், நடன நாட்டிய நிகழ்ச்சி, பட்டிமன்றம், நாட்டிய நாடகம் ஆகியவையும் நடைபெறும் என்றும் மாணவ மாணவிகள் அதில் கலந்து  கொண்டு மகிழ்ச்சி அடையலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Mahendran