செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2024 (13:32 IST)

RTI-ன் கீழ் தகவல்களை வழங்குவதில் மண்டல ரயில்வேக்கான புதிய விதிமுறை- இந்திய ரயில்வே -

pm modi selfie
RTI-ன் கீழ் தகவல்களை வழங்குவதில் மண்டல ரயில்வேக்கான விதிமுறைகளை இந்திய ரயில்வே கடுமையாக்கியுள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி   நடந்து  வருகிறது.

இந்த நிலையில், 50 ரயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் செல்ஃபி பூத்களுக்கு செலவிடப்பட்ட விவரங்களை RTI மூலம்             கேட்கப்பட்ட கேள்விக்கு தற்காலிக பூத் அமைக்க ரூ.1.25 லட்சமும்,   நிரந்தர பூத் அமைக்க ரூ.6.25 லட்சமும் செலவிடப்படதாக மத்திய ரயில்வேயில் பணியாற்றி வரும் தலைமை மக்கள்  தொடர்பு அதிகாரி டாக்டர் சிவ்ராஜ் மனஸ்புரே  தகவல் அளித்திருந்தார்.

இந்த செலவினங்கள் பற்றி அரசியல்  கட்சிகள் மற்றும் பொதுமக்கள் விமர்சனம் கூறி வரும் நிலையில், இத்தகவல்களை RTI மூலம் அளித்த அதிகாரியான் ரயில்வே தலைமை PRO இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

இந்த  நிலையில், RTI-ன் கீழ் தகவல்களை வழங்குவதில் மண்டல ரயில்வேக்கான விதிமுறைகளை இந்திய ரயில்வே கடுமையாக்கியுள்ளது.

அதன்படி,  இனி அனைத்து பதில்களும், மண்டல இரயில்வே பொது மேலாளர்கள் அல்லது ரயில்வே கோட்ட மேலாளர்களின் அனுமதீ பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.