வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2018 (12:57 IST)

மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நர்ஸ்: காரணம் என்ன தெரியுமா?

நெல்லை மாட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தங்கி செவிலியருக்கு படித்து வரும் நர்ஸ் ஒருவர் நேற்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
நெல்லை மாவட்டத்தில் தனியார் கண் மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு செவிலியருக்குப் படிக்கும் மாணவிகள் பலர் அங்கேயே பணிபுரிகிறார்கள். மருத்துவமனையில் தங்குவதற்கு பல அறைகள் உள்ளதால் பல மாணவிகள் அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
 
இந்நிலையில் அந்த மருத்துவமனை திண்டுக்கல்லை சேர்ந்த 18 வயதான உஷாமேரி என்ற நர்ஸ் நேற்று மதியம் தனது அறையில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
 
இதனையடுத்து நர்ஸ் உஷாமேரியின் மரணத்தில் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.