தொடர்புடைய செய்திகள்
- என்னது சீட் இல்லையா?.. அப்ப ஆதரவு வாபஸ்! – திமுக ஆதரவை வாபஸ் பெற்ற கருணாஸ், அன்சாரி
- எடப்பாடி என்ன அவ்வளவு பெரிய ஆளா? விஜயகாந்த் மகன் ஆவேச பேச்சு!
- சசிகலாவின் அரசியல் விலகல் அமமுகவினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன?
- ஸ்படிக மாலை அணிந்துக்கொள்வதால் என்ன நன்மைகள் உண்டு தெரியுமா...?
- தங்கம் விலை மீண்டும் சரிவு; இன்றைய நிலவரம் என்ன?
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க தொகுதி ஒப்பந்தம் முடிவு!
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலையில் அவரது ராஜினாமா குடியரசுத் தலைவரால் ஏற்கப்பட்டது. எதிர்க்கட்சிகளும் புதுச்சேரியில் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என அறிவித்ததை அடுத்து புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ளதால் குடியரசுத் தலைவர் ஆட்சி தொடர்கிறது. அதே சமயம் கூட்டணி கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். ஆம், அதன்படி பாஜக, அதிமுக, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி இன்று மாலைக்குள் இறுதி செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 14 தொகுதிகள் என்.ஆர். காங்கிரஸ், 10 தொகுதிகள் பாஜக, அதிமுக 6 தொகுதிகள் என பேசப்பட்டது. ஆனால் இதற்கு என்.ஆர். காங்கிரஸ் ஒப்புக்கொள்ளாததால் தற்போது என்.ஆர்.காங்கிரசுக்கு 16 தொகுதிகளும், பா.ஜ.க, அதிமுகவுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க இடையே தொகுதி பங்கீடு நிறைவடைந்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
