வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2017 (13:50 IST)

ஜெ.வின் மரணம் ; 15 பேருக்கு நோட்டீஸ்; ஆட்டத்தை ஆரம்பித்த ஆறுமுகசாமி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ள முன்னாள் நீதிபதி ஆறுமுகம், இதுகுறித்து 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


 

 
ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷன் விசாரிக்கும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி சென்னை எழிலகத்தில் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக் கமிஷனின் தலைவராக கடந்த செப்.30ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், இதுவரை விசாரணை தொடங்கப்படாமலேயே இருந்தது. 
 
அந்நிலையில், ஆறுமுகம் தலைமையிலான குழு இன்று ஜெ. வசித்து வந்த போயஸ்கார்டன் வீட்டில் விசாரணையை தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, ஜெ.வின் பாதுகாவலர்கள், உதவியாளர்கள் என மொத்தம் 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில், ஆறுமுகம் கலந்துகொள்ளவில்லை.  
 
அவர்கள் விளக்கம் அளித்த பின்பே, முதல் கட்ட விசாரணையை ஆறுமுகசாமி தொடங்குவார் எனத் தெரிகிறது. மூன்று மாதங்களில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.