திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 25 மே 2022 (15:10 IST)

ஜோ பைடன் ஜப்பானிலிருந்து கிளம்பியதும் ஏவுகணை சோதனை! – அலப்பறை செய்யும் வடகொரியா!

உலக நாடுகள் எதிர்ப்பை மீறியும் தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து வரும் வடகொரியா தற்போது அமெரிக்க அதிபர் ஜப்பான் சென்று வந்த நிலையில் மீண்டும் ஏவுகணை சோதனையை தொடங்கியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அமெரிக்கா, வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளபோது வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பானில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டிற்காக சென்றிருந்தார். அங்கு அவர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிவிட்டு புறப்பட்ட சில மணி நேரத்திற்குள் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை தொடங்கியுள்ளது.

இன்று அதிகாலை ஜப்பான் கடல்பகுதியை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் மூன்று ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையிலும் அதுகுறித்து கவலை இல்லாமல் தொடர்ந்து வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.