திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2023 (14:21 IST)

ஆஸ்திரேலியாவில் 3 வது முறையாக இந்துக் கோவில் மீது தாக்குதல்

Australia
ஆஸ்திரேலிய நாட்டில்  3 வது முறையாக இந்துக் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிற்து.

ஆஸ்திரேலிய நாட்டின்  உள்ள இந்துக் கோவில்கள் மீது தாக்குதல் நடந்து வருவதாக தகவல் வெளியாகும் நிலையில், சமீபத்தில், விக்டோரியா மாநிலத்தில் இந்துக் கோவிலான சிவ விஷ்ணு கோவில்   மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர்.

இந்த கோயிலில், இந்தியர்களுக்கு எதிராக சில வாசகங்கள் எழுதி, ஒரு வாரத்தில் இரண்டாம் முறையாக  தாக்குதல்  நடத்தப்பட்டப்பட்டது.

தமிழர் திரு நாளாம் பொங்கல் பண்டிகையொட்டி, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் 3வது முறையாக இந்துக் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்குள்ள இஸ்கான் கோவிலின் சுவர்களில் காலிஸ்தான் வாழ்க என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் பிரபல இதழில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள இந்துக்கள், கோயில் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.