சசிகலாவுக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டால் கடும் நடவடிக்கை: ஆளுநர் எச்சரிக்கை


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (18:27 IST)
காவல்துறை சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியதை அடுத்து காவல்துறை சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 


சசிகலா முதல்வராக பதவி ஏற்கும் முன்பே அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாம். மேலும் பதவியேற்பு விழா எப்போது என்று தெரியாமல், பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் காவல்துறை பாதுகாப்பு ஏன்? என்றும் ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன்பின் காவல்துறை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று ஓ.பன்னீர்செல்வம், காவல்துறை சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார். சசிகலா எம்.எல்.ஏ.க்களை நட்சத்திர விடுதியில் அடைத்து வைத்துள்ளார் என்று ஓ.பி.எஸ் கூறியதற்கு, ஆளுநர் காவல்துறையினரிடம் நடவடிக்கை எடுக்குமாறு கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இனி காவல்துறை சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட கூடாது என்று ஆளுநர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

 


இதில் மேலும் படிக்கவும் :