வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 24 நவம்பர் 2023 (08:10 IST)

12 ஆம் வகுப்பில் உயிரியல் பாடம் படிக்காதவர்களும் மருத்துவம் பயிலலாம்: அதிரடி அறிவிப்பு..!

12 ஆம் வகுப்பில் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் படித்தவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் படிக்க முடியும் என்ற நிலையில் தற்போது உயிரியல் படிக்காதவர்களும் மருத்துவர்கள் ஆகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அறிவியல் குரூப்பில் உயிரியல் பாடம் எடுக்காமல் இயற்பியல் வேதியியல் மற்றும் கணிதம் பாடங்கள் படித்தவர்கள் மருத்துவம் படிக்கலாம் என அறிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பங்களுக்கான பிளஸ் டூ தேர்வை அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் தனியாக எழுதி வெற்றி பெற வேண்டும் என்றும் அதன் பின்னர் அவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு  சேர்வதற்கான விண்ணப்பத்தை அளித்து நீட் தேர்வு எழுதி  மருத்துவம் பயிலலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது

இந்த புதிய உத்தரவு மூலம் 12ஆம் வகுப்பில் உயிரியல் பாடத்தை முதன்மை பாடமாக எடுத்து படிக்காதவர்கள் தனியாக உயிரியல் படித்து மெடிக்கல் கல்லூரியில் சேரலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva