குதிகால் வலி ஏற்படுவது ஏன்? என்னென்ன முன்னெச்சரிக்கை..!
பெரும்பாலும் குதிகால் வலி என்பது 40 வயதுக்கு மேல் வந்து தொல்லை கொடுக்கும் நிலையில் எதனால் அது வருகிறது என்பதை பார்ப்போம்
குதிகால் எலும்பும், தசை நார்களும் உராய்வதை தடுக்க இருக்கும் திரவப்பையை வீங்கிவிட்டால் குதிகால் வலி வரும். சிலருக்கு குதிகால் எலும்பில் திசுக்கொத்து சேர்ந்தால் எலும்பு அதிகமாக வளர்ந்துவிடும் அதன் காரணமாகவும் குதிகால் வலி ஏற்படுவதுண்டு.
மேலும் சிலருக்கு யூரிக் அமிலம் அதிகமாக இருந்தாலும் குதிகால் வலி வரலாம். 30 முதல் 40 வயது உட்பட்ட ஆண் பெண் என இருபாலருக்கும் குதிகால் வலி வர வாய்ப்பு இருக்கிறது.
ஒல்லியானவர்களுக்கு குதிகால் வலி வராது என்றும் உடல் எடை அதிகமானவர்கள் தான் வரும் என்று கூற முடியாது. அதேபோல் குதிகால் வலி வாரிசாகவும் வருவதுண்டு.
நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை செய்பவர்களுக்கு குதிகால் வலி வரலாம். மேலும் சிலர் கூம்பு வடிவ ஷூக்கள் அணிந்தாலும் குதிகால் வருவதற்கு வாய்ப்பு உண்டு
எனவே நீண்ட நேரம் வேலை செய்வதை தவிர்த்து சரியான ஷூக்கள் வடிவமைத்து அணிந்து கொண்டால் குதிகால் வலி வருவதை தவிர்க்கலாம்.
Edited by Mahendran