தமிழகத்தில் கொரோனா 2ம் அலை இதுவரை உருவாகவில்லை: சுகாதார துறை செயலாளர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை உருவாக்கி விட்டதாக சுகாதாரத்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் இதுவரை கொரோனா இரண்டாவது அலை உருவாக்கவில்லை என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. நேற்று தமிழகத்தில் ஆயிரத்து 500 பேர் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பதும் அதில் 500 பேர் வரை சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மீண்டும் தமிழகத்தில் லாக்டவுன் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை இதுவரை உருவாகவில்லை என்றும் இந்தியாவின் பல பகுதிகளில் இரண்டாவது அலை உறுதி செய்யப்பட்ட நிலையிலும் தமிழகத்தில் அதனை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இருப்பினும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதை பார்க்கும்போது விரைவில் இரண்டாவது அலை உருவாகி விடுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது