1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (18:43 IST)

ரெட் அலர்ட் வாபஸ்: புயலிடம் இருந்து தப்பியதா தமிழகம்?

தமிழகத்தில் வழங்கபட்டிருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை ரெட் அலர்ட் எச்சரிக்கை இல்லை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதை எச்சரிக்கும் வகையில் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டுள்ளது.    
 
இதனால் கனமழை இருக்ககூடும். மேலும், தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் இப்போது சென்னையில் இருந்து 1500 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த மண்டலம் ஏப்ரல் 30 ஆம் தேதி வட தமிழகம் நோக்கி புயல் வரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஆனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை. ஆனால், புயல் அகடக்கும் நேரத்தில் புயலின் நகர்வைப் பொறுத்தே காற்றோ, மழையோ இருக்குமாம். 30 ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.