1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 30 மார்ச் 2020 (17:30 IST)

சென்னையின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட்டா? மாநகராட்சி விளக்கம்

சென்னையின் ஒருசில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர் மற்றும் கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாவும் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை சென்னை மாநகராட்சி தற்போது மறுத்துள்ளது.
 
சென்னையின் சில பகுதிகளில் ரெட் அலர்ட் விடப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை சென்னை பெருநகர மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியபோது, ‘கொரோனா காரணமாக சென்னையில் ரெட் அலர்ட் எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் மக்கள் அச்சப்பட வேண்டாம்’ என்றும் தெரிவித்துள்ளார்.
 
சென்னை மாநகராட்சி ஆணையரின் இந்த அறிவிப்புக்கு பின்னரே  அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர் மற்றும் கோட்டூர்புரம் ஆகிய பகுதி மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.