1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 2 நவம்பர் 2022 (13:09 IST)

ராஜராஜ சோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் ஸ்டாலின்

Raja Raja cholan
ராஜராஜசோழன் இந்துவா அல்லது சைவரா என்ற சர்ச்சை கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருந்த நிலையில் தற்போது மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நாளை நவம்பர் 3ஆம் தேதி ஆண்டுதோறும் விழாவாகக் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும் இனி வரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும்
 
மேலும் தஞ்சாவூரில் மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்
 
Edited by Mahendran