திமுகவில் அழகிரிக்கு இடமில்லை; அன்பழகன் அதிருப்தி
திமுகவில் அழகிரியை சேர்க்க ஆலோசனை நடந்து வரும் தகவலை அறிந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் நாளை திமுக செயற்குழு கூட்டம் முதல்முறையாக நடைபெற உள்ளது. இதில் திமுக கட்சியின் நிர்வாக அமைப்பில் மாற்றம் செய்யப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அவரை கட்சியில் சேர்க்க அவரது ஆதரவாளர்கள் சிலர் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த தகவலை அறிந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். எந்த நெருக்கடி வந்தாலும் சரி, குறிப்பாக குடும்பத்தினரிடம் இருந்து நெருக்கடி வந்தாலும் சரி அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்க்க வேண்டாம் என்று அன்பழகன் ஸ்டாலினிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.