1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (12:39 IST)

விராட் கோலி கதாபாத்திரத்தில் துல்கர் சர்மான்

துல்கர் சல்மான் இந்தியில் நடித்த கர்வான் படத்தை தொடர்ந்து, அபிஷேக் சர்மா இயக்கத்தில் விராட் கோலி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி  இருக்கிறது. 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வேடத்தில் மம்முட்டியின் மகனும், மலையாள நடிகருமான துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துல்கர் தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, நடிகையர் திலகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் கர்வான் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்த நிலையில், மற்றுமொரு இந்தி படத்திலும் துல்கர்  நடிக்க இருக்கிறார். தேரே பின்லேடன், த ஷாக்கீன்ஸ், பர்மனு ஆகிய படங்களை இயக்கிய அபிஷேக் சர்மா அடுத்ததாக ஸோயா பேக்டர் என்ற படத்தை  இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் துல்கர் சர்மான் விராட் கோலி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக சோனம் கபூர் நடிக்கிறார். இவர் அனுஷ்கா சர்மா கதாபாத்திரத்தில் வருகிறாரா? என்பது தெரியவில்லை. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த படம் விராட் கோலி கிரிக்கெட் விளையாட்டில் அவர் நிகழ்த்திய சாதனைகளை மையப்படுத்தி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.