மக்கள் யாரும் பிரதமர் மோடியை நம்பவில்லை -முதல்வர் ஸ்டாலின்
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார்.
அதன்படி தேர்தல் விதிகள் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது.
நாடு முழுவதும் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று, விருது நகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரியில் திமுக வேட்பாளர்ளுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது அவர் கூறியதாவது: 5 மாநில தேர்தலின்போது பிரதமர் சிலிண்டர் விலையை குறைத்தார். வருடம் வருடம்தான் மகளிர் தினம் வந்தது. ஏன் அப்போது சிலிண்டர் விலை குறைப்பு இல்லை? தேர்தல் வந்தால் மட்டும் பிரதமர் விலைகளை குறைக்கிறார். தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற பிரதமர் நாடகம் போடுகிறார். மக்கள் யாரும் பிரதமர் மோடியை நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய வாக்குறுதிகளை கொடுத்தால் நிறைவேறாத பழைய வாக்குறுதிகளை மக்கள் மறந்துவிடுவார்கள் என பிரதமர் மோடி தப்புக் கணக்குப்போடுகிறார். தேர்தலுக்குத் தேர்தல் பிரதமர் மோடி வாயால் வடை சுடுவார் என மக்களுக்கு தெரிந்துவிட்டது ;10 ஆண்டுகால ஆட்சியில் பாஜக நாட்டையே படுகுழியில் தள்ளிவிட்டது என்று கடுமையாக மத்திய அரசை விமர்சித்துள்ளார்.