செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 11 ஆகஸ்ட் 2021 (08:26 IST)

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? தேமுதிக விளக்கம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் நேற்று இரவு திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது குறித்து தேமுதிக விளக்கமளித்துள்ளது
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை கோளாறு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே 
 
குறிப்பாக சமீபத்தில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பதும் அதன் பின்னர் பூரண குணமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று திடீரென சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனால் அவரது உடல் நலத்திற்கு என்ன என்ற அச்சம் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டது 
 
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வழக்கமான உடல் பரிசோதனைக்காக ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் வேறு எந்த பிரச்சனையும் அவருக்கு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்தே தேமுதிக தொண்டர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது