வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (22:10 IST)

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில வருடங்களாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக் கோளாறு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் குணமடைந்தார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி விஜயகாந்த் அவர்கள் மீண்டும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன