1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (20:54 IST)

சுஹாசினியின் 60வது பிறந்த நாள்: கமல் வீட்டில் கொண்டாட்டம்!

நடிகை சுகாசினி தனது 60வது பிறந்தநாளை தனது சித்தப்பாவும் உலகநாயகன் நடிகருமான கமல்ஹாசன் வீட்டில் கொண்டாடி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
எண்பதுகளில் மற்றும் 90களில் பிரபல நடிகையாக இருந்தவர் சுகாசினி. இவர் சமீபத்தில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டில் நடந்த இந்த கொண்டாட்டத்தில் குஷ்பு, லிசி, பூர்ணிமா பாக்கியராஜ், பாக்கியராஜ், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர் 
 
நடன விருதுகள் மற்றும் இசை விருதுகள் இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடந்ததாகவும் அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தோழிகள் மற்றும் நண்பர்கள் சந்தித்து கொண்டதையடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் கமலஹாசன், சாருஹாசன் மற்றும் குடும்பத்தினருடன் அனைவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது