வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (14:09 IST)

மீண்டும் பதற்றம்; 4 நாட்களாக வெளியாகாத மருத்துவ அறிக்கை

திமுக கருணாநிதி கருணாநிதி உடல்நிலை மீண்டும் கவலைகிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அவரது மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் எந்த ஏற்றமும் இல்லை, பின்னடைவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டாவது அவரது உடல்நிலை குறித்து வதந்தி பரவி அன்றைய இரவு முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. காவேரி மருத்துவமனை சார்ப்பில் அவரது உடல்நிலை குறித்து விரிவான மருத்துவ அறிக்கை கடந்த 4 நாட்களாக வெளியாகவில்லை.
 
இந்நிலையில் தற்போது அவரது உடல்நிலை கவலைகிடமாக உள்ளது என்ற தகவல் கசிந்துள்ளது. அதோடு தயாளு அம்மாள் கருணாநிதியை பார்க்க காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் முதல்முறையாக அவரது மனைவி தயாளு அம்மாள் வந்துள்ளார்.
 
இதனால் தற்போது மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.