1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2019 (12:57 IST)

28 ஆம் தேதி இறைச்சி கூடங்கள் மூடல்…

மகாவீர் நிர்வான் நாளையொட்டி வரும் 28 ஆம் தேதி, அனைத்து இறைச்சிக் கூடங்களும் மூடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சமண மதத்தை தோற்றுவித்தவரான மகாவீர் நிர்வான் நாள் இந்தியா முழுவதும் வருகிற அக்டோபர் 28 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை சமணர்கள் தங்கள் மதத்தின் முக்கிய நாளாக கருதுகின்றனர்.

சமண மதத்தில் அறிவுறுத்தப்படும் ஜீவகாருணியத்தால் புலால் உண்ணாமையை கடைப்பிடிக்கின்றனர் சமணர்கள். இந்நிலையில் மகாவீர் நிர்வான் நாளையொட்டி சென்னையில் வரும் 28 ஆம் தேதி அனைத்து இறைச்சி கூடங்களும் மூடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் அதற்கு முந்திய நாளான தீபாவளியில் ஆடு, மாடு, மற்றும் பிற கறி விற்பனைகள் சூடுபிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், அதற்கு அடுத்த நாளான மகாவீர் நிர்வான் நாளில் அனைத்து இறைச்சிக் கூடங்களும் மூடப்படுவது குறிப்பிடத்தக்கது.