வருத்தத்தில் இருக்கும் காவலர்கள்!
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து காவலர்களுக்கும் வருத்தத்தில் உள்ளனர்.
காரணம் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அவர்களுக்கு இட்ட உத்தரவு. உள்ளாட்சி தேர்தல் குறித்து காவலர்களுக்கு அவர் கூறியதாவதும் “காவல் துறையில் தற்போது பற்றாக்குறையாக உள்ளதால் பாதுகாப்பு பணிக்கு போதுமான காவலர்கள் இல்லை. தேர்தல் முடியும்வரை காவலர்கள் விடுப்பு எடுக்க கூடாது. விடுமுறையில் சென்ற போலீசாரும் உடனடியாக விடுமுறையை ரத்து செய்ய வேண்டும்.” என்றார்.
இதனால், வீட்டில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அவர்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.