திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஜனவரி 2020 (15:30 IST)

ஜல்லிக்கட்டு’ குறித்து நான் அப்படி சொல்லவே இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்

ஜல்லிக்கட்டு விளையாட்டை பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாக இன்று காலை ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த செய்திக்கு அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தற்போது விளக்கம் அளித்துள்ளார் 
 
ஜல்லிக்கட்டு விளையாட்டை பாடபுத்தகத்தில் சேர்க்கப்படும் என்று நான் சொல்லவில்லை என்றும் ஜல்லிக்கட்டு குறித்த சிடிக்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று தான் கூறியதாகவும் பாடப்புத்தகத்தை மேலும் மேலும் அதிகமாக்கி குழந்தைகளின் சுமையை அதிகரிக்க அரசு விரும்பவில்லை என்றும் அவர் கூறினார் 
 
மேலும் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் மையங்கள் மாற்றப்படும் என்று வெளியாகியிருக்கும் தகவலில் உண்மை இல்லை என்றும் மாணவர்கள் அந்தந்த மையங்களிலேயே தேர்வு எழுதுவார்கள் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்