பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் நடவடிக்கை: தமிழக அரசு..!
பிளாஸ்டிக் பைகளில் டீ காபி உள்பட சூடான பொருள்கள் உணவுப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரச எச்சரித்துள்ளது.
பல ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் பார்சலாக உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் போது பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கப்படுகின்றன. குறிப்பாக டீ காபி போன்ற சூடான பானங்கள் பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கப்படும் போது அவை பிளாஸ்டிக்கில் உள்ள கெமிக்கல் கலந்துள்ளதால் உடலுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக்கில் உள்ள நுண் துகள்கள் உணவில் கலந்து உணவின் தரத்தை முற்றிலும் மாற்றி விடுகிறது என்றும் இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Edited by Siva