1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2023 (08:29 IST)

சாப்பிட்டதுமே வயிற்றுப்போக்கு வருதா? இதை மட்டும் செஞ்சிடாதீங்க!

Bad Fats - Foods
உணவு சாப்பிட்டதுமே வயிற்றுப்போக்கு ஏற்படும் irritable bowel syndrome என்ற பிரச்சினை உலகம் முழுவதுமே பலருக்கு ஏற்படுகிறது. அதன் காரணம் மற்றும் தடுக்கும் முறை குறித்து அறியலாம்.

பலருக்கு உணவு சாப்பிட்டவுடனே அசௌகரியம், மலம் கழிக்கும் உணர்வு ஏற்படுவதை irritable bowel syndrome என கூறுகின்றனர்.

உலகம் முழுவதும் 10% மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் கடுமையானது முதல் மிதமான வயிற்றுப்போக்கு வரை ஏற்படும்.

முக்கியமாக சில உணவுகளை சாப்பிடும்போது உடனே வயிற்றுப்போக்கு ஏற்படும். இந்த பிரச்சினைக்கு தனியாக மருந்து ஏதும் கிடையாது.

முறையான ஆரோக்கியமான உணவு பழக்கங்களை மேற்கொள்வதால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும்.

இந்த பிரச்சினை உள்ளவர்கள் ஃபைபர் சத்துள்ள காய்கறி, பழங்களை சாப்பிடக்கூடாது. கார உணவுகளை உண்ணக்கூடாது.

பால், தயிர், வெண்ணெய், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களை சாப்பிடுவது வயிற்றுபோக்கை அதிகப்படுத்தும்.

தர்பூசணி, மாம்பழம், பேரிக்காய், ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை தவிர்க்க வேண்டும்.
ஆரஞ்சு, ப்ளூபெரி, திராட்சை, கேரட், பீன்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம்.

முட்டை, இறைச்சி போன்றவற்றையும், கீரை வகைகளையும் சாப்பிடலாம். உணவு டயட் வயிற்றுப்போக்கை குறைக்கும்.

irritable bowel syndrome இருப்பதாக அறிந்தால் மருத்துவரை அணுகி முறையான உணவு டயட்டை பின்பற்ற வேண்டும்.