திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 15 மார்ச் 2023 (16:01 IST)

வைரஸ் காய்ச்சலால் தமிழக பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன்..!

வைரஸ் காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக புதுவையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் புதுவை போலவே தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் புதுவை மாநிலத்தை போலவே தமிழகத்தில் விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் 
 
இது குறித்து அவர் மேலும் கூறிய போது தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது என்றும் பெரிய அளவில் பரவவில்லை என்றும் புதுச்சேரியை போலவே தமிழகத்தில் பள்ளி விடுமுறை விட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார். 
 
இந்தியாவில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது என்றும் இன்புளுயன்சா ஏ வைரஸின் துணை வைரஸ் ஆன ஹச்3என்2 என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் தாக்கி வருகிறது என்றும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வைரஸ் காய்ச்சல் காரணமாக முன்கூட்டியே பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
 
Edited by Siva