அந்தமானுக்கு நகர்கிறது காற்றழுத்த தாழ்வு: தமிழகத்திற்கு பாதிப்பு உண்டா?
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு தற்போது அந்தமானை நோக்கி நகர்ந்து வருவதாகவும் இதனால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்
தாய்லாந்து பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகரலாம் என்று கணிக்கப் பட்டுள்ளது என்பதும் இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 2 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அதன் பின்னர் டிசம்பர் 4ஆம் தேதி புயலாக மாறும் என்றும் கூறியுள்ளார்
இந்த புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதியை கரையை நெருங்கும் என்றும் இதனால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அரபிக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்