1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 25 மார்ச் 2021 (16:51 IST)

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி: பெங்களூர் மாநகராட்சி உத்தரவு

வெளிமாநிலத்தில் இருந்து மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து பெங்களூர் வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என பெங்களூர் மாநகராட்சி உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று கர்நாடகம்.
 
இந்த நிலையில் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் தற்போது புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூருக்கு வெளிமாநிலத்தவர்கள் அல்லது வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நுழைய வேண்டுமென்றால் கையில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் என்று பெங்களூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பெங்களூர் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. எனவே பெங்களூர் செல்பவர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்