பொறியியல் படிப்புக்கான தகுதியில் திடீர் மாற்றம்: மாணவர்களிடையே பரபரப்பு

பொறியியல் படிப்புக்கான தகுதியில் திடீர் மாற்றம்
Last Modified வியாழன், 13 பிப்ரவரி 2020 (15:11 IST)
பொறியியல் படிப்புக்கான தகுதியில் திடீர் மாற்றம்
பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர வேண்டுமானால் அந்த மாணவர் கண்டிப்பாக கணிதம், இயற்பியல், மற்றும் வேதியியல் ஆகிய மூன்று பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இந்த தகுதி திடீரென மாற்றப்பட்டு உள்ளது. பொறியியல் படிப்பில் சேர கணிதம், இயற்பியல் மட்டும் இருந்தால் போதும் என்றும் வேதியியல் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கணிதம் இயற்பியல் மற்றும் உயிரியல் படித்த மாணவர்களும், கணிதம் இயற்பியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர்களும் பொறியியல் கல்லூரியில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இதனால் பல மாணவர்கள் மகிழ்ச்சியும் ஒரு சில மாணவர்கள் அதிர்ச்சியும் அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடைமுறை இந்த கல்வியாண்டு முதல் அமலுக்கு கொண்டு வரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து ஒரு சில மாணவர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அவ்வாறு நீதிமன்றம் சென்றால் நீதிமன்றத்தின் தீர்ப்பு பின்னரே இது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :