புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2019 (10:36 IST)

மத்தியில இவுங்கதான் ஆட்சிய பிடிப்பாங்க!!! கஸ்தூரி ஆருடம்

மத்தியில் பெரிய அளவிற்கு ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டம்னற இடைத்தேர்தல் நெருங்க இன்னும் சில நாட்களே உள்ளது. பல்வேறு கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் பல்வேறு சமூக அவலங்களுக்கு குரல் கொடுக்கும் நடிகை கஸ்தூரி பேசுகையில் காங்கிரஸ் பல மாநிலங்களில் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடுவதால் பின்னடைவு ஏற்படலாம். மாநிலங்களுக்கு மாநிலம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுள்ளான முரண்பட்ட கூட்டணி அவர்களின் பெரிய மைனஸ். 
 
எந்த முன்னணி கட்சிகளுமே பெண்களுக்கு தேர்தலில் வாய்ப்பளிக்கவில்லை. நாம் தமிழர் கட்சி தான் 20 தொகுதியை பெண்களுக்கு ஒதுக்கி உள்ளது. என்னை பொறுத்த வரையில் மத்தியில் பெரிய அளவில் ஆட்சி மாற்றம் வர வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது என அவர் கூறினார்.