1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2023 (17:04 IST)

பாஜக கூட்டணி வேண்டாம்.. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தல்

ADMK
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் தற்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இதில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் பாஜக இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பாக பேரறிஞர் அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva