வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2023 (14:45 IST)

பாஜக தலைவர் திடீர் மாற்றம்: ஜே.பி.நட்டா அதிரடி அறிவிப்பு..!

jp nadda
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுகவில் உள்ள சில தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா  அறிவித்துள்ளார். 
 
புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய தலைவராக செல்வ கணபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
அதேபோல் மேகாலயா மாநில பாஜக தலைவரும் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றும் எண்ணம் இல்லை என்று பாஜக தலைமை உறுதிபட கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran