1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (15:34 IST)

இனிமேல் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை: எடப்பாடி பழனிசாமி உறுதி..!

Edappadi Modi
இனிமேல் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என பாஜக மட்டும் இன்றி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து சமீபத்தில் அதிமுக விலகிய நிலையில் மீண்டும் இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இல்லை என்ற அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே நடந்த அதிமுக விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி ’வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என்றும் அவர்களுக்கு நல்ல பதிலடி கொடுங்கள் என்றும் தெரிவித்தார்

இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என முதல்வர் பேசி வருகிறார் என்றும் ஆனால் கடன் வாங்குவதில் தான் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார்

அதிமுகவை பொருத்தவரை தேசிய கட்சிகளுடன் இனிமேல் கூட்டணி இல்லை என்றும் யார் யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Siva