செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By

ஹன்சிகா & எம் ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் வெப் சீரிஸ்

இயக்குனர் எம் ராஜேஷ் ஒரு காலத்தில் வளரும் ஹீரோக்களின் ஆஸ்தான இயக்குனராக வலம் வந்துகொண்டிருந்தார்.

சிவா மனசுல சக்தி, பாஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய ஹிட் படங்களின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இயக்குனர் எம் ராஜேஷ். ஆனால் ஒரு கட்டத்தில் அவரின் பார்முலா படங்கள் ரசிகர்களுக்கு போரடிக்க ஆரம்பித்ததால் வரவேற்புப் பெறவில்லை. ஆனாலும் ராஜேஷ் இன்னும் பார்முலாவை மாற்றவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் நடிகை ஹன்சிகாவை கதாநாயகி ஆக்கி, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக ஒரு வெப் சீரிஸை இயக்கி வருகிறாராம். இதை முடித்ததும் ஜெயம் ரவிக்கு ஒரு படத்தை இயக்க உள்ளாராம்.