வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 11 மார்ச் 2023 (14:02 IST)

விளைநிலங்களை கையகப்படுத்துவதை என்எல்சி நிர்வாகம் கைவிட வேண்டும்- விஜயகாந்த்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.என்.சி. நிறுவனம் சுரங்கப் விரிவாக்கப் பணிகளுக்காக மக்களின் எதிர்ப்பை மீறி விளை நிலங்களை கையகப்படுத்துவதை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’சுரங்க விரிவாக்க பணிகளுக்காக விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும்.

அராஜக முறையில் விளை நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிர்வாகத்திற்கும், அதனை தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் தமிழக அரசுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக காவல்துறையை பயன்படுத்தி மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு விளை நிலங்களை அபகரிக்க முயல்வது எந்த வகையில் நியாயம்?

மக்களுக்கான திட்டங்களை மட்டுமே மத்திய மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும். அதை விடுத்து, மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் எந்த ஒரு திட்டங்களை கொண்டு வந்தாலும் அதனை ஏற்று கொள்ள முடியாது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்காமல் நிலம் கையகப்படுத்தும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.