திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (09:53 IST)

நகைச்சுவை நடிகரும் டப்பிங் கலைஞருமான காளிதாஸ் மரணம்!

வடிவேலுவுடன் பல படங்களில் நடித்துள்ள நடிகர் காளிதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

தமிழ் சினிமா டப்பிங் கலைஞர்களில் கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரர் காளிதாஸ். மர்மதேசம் சீரியல் மூலம் பிரபலம் ஆன இவர் அம்பேத்கர் படத்தில் மம்மூட்டிக்கு தமிழில் டப்பிங் பேசினார். பல நூறுக்கணக்கான படங்களில் டப்பிங் கலைஞராக பணியாற்றியுள்ள இவர் வடிவேலுவுடன் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததின் மூலம் பிரபலமானார்.

இந்நிலையில் அவர் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு சக நடிகர்களும் ரசிகர்களும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.