வியாழன், 15 ஜனவரி 2026
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 ஜூன் 2023 (19:47 IST)

காட்டு யானைகள் நடமாட்டம்.. மருதமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

marudhamalai
முருகனின் அறுபடை வீடுகளை அடுத்து ஏழாவது படை என்று சொல்லப்படும் மருதமலைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வரும் நிலையில் தற்போது பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
இந்த கோயிலுக்கு படிக்கட்டு வழியாகவும் சாலை வழியாகவும் செல்லலாம் என்ற நிலையில் தற்போது அங்கு 7 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதாகவும் இதனை அடுத்து காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்த வனத்துறையினர் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
யானைகள் நடமாட்டம் இருப்பதை அடுத்து மருதமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை ஐந்து மணிக்கு மேல் அடிவாரத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
கார்களில் செல்ல தடை இல்லை என்றாலும் கவனத்துடன் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் படிக்கட்டு வழியாக செல்லக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran