தமிழ்நாடு பிரிமியர் லீக்: சூப்பர் ஓவரில் நெல்லை அணி வெற்றி!
தமிழ்நாடு பிரிமியர் லீக்: சூப்பர் ஓவரில் நெல்லை அணி வெற்றி!
தமிழ்நாடு பிரீமியர் லீக் நேற்று தொடங்கியுள்ள நிலையில் நேற்றைய முதல் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் நெல்லை திண்டுக்கல் சேலம் கோவை ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சேப்பாக் சூப்பர் கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல்ஸ் அணிகள் மோதின
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெல்லையில் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 185 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சேப்பாக் அணியும் 184 ரன்கள் எடுத்தது
இதனையடுத்து ஆட்டம் சமமானதால் சூப்பர் ஓவர் முடிவு செய்யப்பட்டது. சூப்பர் ஓவரில் சேப்பாக் அணி 9 ரன்கள் எடுத்த நிலையில் நெல்லை அணி 10 ரன்கள் எடுத்ததால் நெல்லை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது