செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 24 பிப்ரவரி 2022 (19:37 IST)

நிர்மலா சீதாராமனுடன் பிடிஆர் சந்திப்பு: முக்கிய கோரிக்கை வைத்ததாக தகவல்!

நிர்மலா சீதாராமனுடன் பிடிஆர் சந்திப்பு: முக்கிய கோரிக்கை வைத்ததாக தகவல்!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அவர் முக்கிய கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. 
 
தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை முழுவதுமாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது 
 
மேலும் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய பேரிடர் நிதியையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் திற்கு முன்னதாகவே இந்த நிதியை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும், இந்த கோரிக்கையை மத்திய நிதியமைச்சர் ஏற்று கொண்டதாகவும் கூறப்படுகிறது