அண்ணாமலைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்: தேர்தல் முடிவு குறித்து நிர்மலா சீதாராமன்!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினருக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் இந்த வெற்றியை பெறுவதற்கு கடுமையாக உழைத்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எனது பாராட்டுக்கள் என்று மத்திய நிதியமைச்சர் தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார்
திருஅண்ணாமலை மற்றும் கட்சி சொந்தங்கள் அனைவரும் கடுமையான உழைப்பின் முதல்கட்ட பாலன் இந்த தேர்தலின் முடிவில் காணக் கிடைக்கிறது என்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டை பாஜக கைப்பற்றியுள்ளது என்பதும் தமிழகத்தில் 200-க்கு மேற்பட்ட வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது