புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 3 ஜூலை 2018 (14:32 IST)

நிர்மலாதேவி குரல்: தடயவியல் சோதனையின் அதிர்ச்சி ரிசல்ட்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு கொண்டு செல்ல முயன்றதாக தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்த நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் அவரது குரல் மாதிரி சோதனைக்காக எடுக்கப்பட்டது. 
 
சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் நிர்மலாதேவியின் குரல் மாதிரி பரிசோதனை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த சோதனையின் முடிவு வெளியாகியுள்ளது.
 
இந்த முடிவின்படி மாணவிகளிடம் செல்போனில் பேசியது நிர்மலாதேவியின் குரல்தான் என்பதை தடயவியல் சோதனை உறுதி செய்துள்ளது. இதனால் மாணவிகளிடம் தவறான நோக்கத்தில் பேசியது நிர்மலாதேவிதான் என்பதற்கான வலுவான ஆதாரம் கிடைத்துள்ளது.