திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 14 மே 2018 (15:17 IST)

நிர்மலாதேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முருகன்- கருப்பசாமிக்கு காவல் நீடிப்பு

பேராசிரியை நிர்மலா தேவிக்கு துணைபோன விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முருகன்- கருப்பசாமிக்கு சிறை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 
 
அருப்புக்கோட்டையில் மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். 
 
இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்க்கு துணைபோன துணை பேராசிரியர் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரும் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இந்நிலையில், முருகன் -கருப்பசாமியின் காவல் இன்று நிறைவடைந்தது. இதனால் இவர்கள் இருவருமே விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி இருவரின் சிறை காவலையும் வரும் 28ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.