ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2024 (17:27 IST)

மதுரை சிறையில் நிர்மலாதேவி..! தண்டனை விவரம் நாளை அறிவிப்பு..!

Nirmala Devi
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி மதுரை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கான தண்டனையை நீதிமன்றம் நாளை வழங்குகிறது.
 
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது. 
 
இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில்  நீதிபதி பகவதி அம்மாள் இன்று  தீர்ப்பு வழங்கினார். நிர்மலாதேவி உட்பட 3 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானபோது,  பேராசியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இரண்டு பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். 

 
5 பிரிவுகளின் கீழ் நிர்மலாதேவி குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் நாளை  அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி மதுரை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.