ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (18:58 IST)

ஊட்டியில் சுற்றுலா தலங்களுக்கு திடீர் கட்டுப்பாடு: நீலகிரி கலெக்டர் அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மின்னல் வேகத்தில் வைரஸ் பரவி வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது சுற்றுலா தலங்களிலும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன 
 
குறிப்பாக ஊட்டியில் நாளை முதல் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே அனைத்து சுற்றுலா தலங்களும் திறந்திருக்கும் என்றும் அதற்குள் சுற்றுலா பயணிகள் தங்களது சுற்றுலா பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்ப வேண்டும் என்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
 
இதனால் ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.