வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 7 பிப்ரவரி 2024 (19:26 IST)

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

bus
தமிழக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து தொழிற்சங்கங்கள், 15வது  ஊதிய ஒப்பந்தம், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர்.

இதையடுத்து, பேச்சுவார்த்தை  நடத்திக் கொள்ளும்படி, போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதையடுத்து, 2 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று, சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தொழிலாளர் நல இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யூ, அண்ணா தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி உள்ப்ட 27 தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு போக்குவர்த்து கழக மேலாண் இயக்குகர்களும் பங்கேற்றனர்.

ஆனால், இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.