நெய்வேலி என்.எல்.சி வெடி விபத்து: 12 பேர் பலி!
நெய்வேலி என்.எல்.சி விபத்தில் நேற்று மாலை முதல் தற்போது வரை மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்வு.
நேற்று மாலை முதல் தற்போது வரை மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 17 பேரில் 16 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.