புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 8 ஜூன் 2019 (14:19 IST)

’முதலிரவுக்கு முன் புதுமாப்பிள்ளை தற்கொலை’ : திடுக் சம்பவம்

தர்மபுரி மாவட்டம் பொன்னரகத்தில் வசித்து வருபவர் மாரியப்பன். இவரது மகன் குமார் (29) இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு சிப்ஸ் கடை நடத்திவந்தார்.
இந்நிலையில் அதே பகுதியில் வசித்துவந்த பாண்டுரங்கன் என்பவரது மகள் சரண்யாவுக்கும் (20). குமாருக்கும் நேற்று காலை மணமகன் வீட்டில் திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று இரவில் குமாருக்கும், சரண்யாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த குமார் தனது வீட்டில் உள்ள அறைக்குள் சென்றுகதவைத்தாழிட்டுக்கொண்டார்.
 
வீட்டிலிருந்த உறவினர்கள் எல்லோரும் கதவைத் தட்டினர்.அவர் வெகுநேரமாக கதவைத் திறக்கவில்லை.  பின்னர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது குமார், தூக்கிட்டு தற்கொலை செய்ததாகத் தெரியவந்ததை அடுத்து புதுமணப்பெண் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
 
இதனையடுத்து பொன்னகரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து உடனே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். தற்பொழுது குமார் எதற்காக தற்கொலை செய்துகொண்டது ஏன் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.