புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 9 பிப்ரவரி 2019 (17:06 IST)

சாலைவிதிகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க தானியங்கி சென்சார் கேமிரா

தமிழகத்தில் அதிகவேகம் மற்றும் சாலைவிதிகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க தானியங்கி சென்சார் கேமிரா பொருத்தப்பட்டு விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.



அதிவேகம் மற்றும் சாலை விதிகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க தானியங்கி சென்சார் கேமரா பொருத்தப்பட்டு விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும்., முதல் கட்டமாக செங்கல்பட்டு முதல் திருச்சி வரை தேசிய நெடுஞ்சாலையில் இந்த சென்சார் கேமரா அமைக்கப்படள்ளது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல் தெரித்துள்ளார். இந்த திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ 25 கோடி நிதி ஒதுக்கியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

சாலைப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து மாணவ - மாணவிகளுக்கான கருத்தரங்கம் கரூரில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் பொறுப்பு சூரியபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றி மாணவர்கள் மத்தியில் பேசினார். பல்வேறு போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். அதே போல தேசிய அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அரவக்குறிச்சி மாணவருக்கு வாழ்த்து தெரிவித்து பதக்கம் வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சேவல் போட்டி கரூர் மாவட்டத்தில் வரும் 16, 17, 18 மூன்று தினங்கள் நடைபெறும் என்றும், கடந்த நான்கு ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் சேவல் போட்டி நடத்த தடை விதித்திருக்கிறது நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாரம்பரிய விளையாட்டு மீண்டும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நீதிமன்றத்தை அணுகி இந்த உத்தரவை பெற்றுள்ளோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் விபத்துக்கள் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அதிவேகம் மற்றும் சாலை விதிகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க தானியங்கி சென்சார் கேமரா பொருத்தப்பட்டு கண்காணித்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக செங்கல்பட்டு முதல் திருச்சி வரை தேசிய நெடுஞ்சாலையில் இந்த சென்சார் கேமரா அமைக்கப்படள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ 25 கோடி நிதி ஒதுக்கியுள்ளார் என்றார்.

பேட்டியின் போது, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் உடனிருந்தார்.

சி.ஆனந்தகுமார்